Senthil Scripts.......

Wednesday, March 14, 2007

என்ன முடிவு ???
நான் பெங்களூர்ல இருந்த வரைக்கும் பொதுவா 9 மணிக்குள்ள வீட்டுக்கு போனதே இல்லை. ஏன்னா வீட்ல போன ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வர நேரமாகும். சீக்கிரம் போய் என்ன பண்ண போறோம்னு 9 மணி வரைக்கும் ப்ரவுஸ் பண்ணிக்கிட்டு, ஃபோன் பேசிக்கிட்டு இருப்பேன் (சொன்னா நம்பனும்.. பசங்கக்கிட்டதான்).என் கூட வேலை செய்யறவங்களும் பொதுவா அப்படித்தான் இருப்பாங்க. இந்த பழக்கம் எனக்கு எப்படி ஸ்டார்ட் ஆச்சினா, என்னுடைய முதல் ப்ராஜக்ட் லீட் நல்ல பேர் வாங்கனும்னு எல்லாரையும் 9 மணி பஸ்லதான் போக வைப்பாங்க. டெஸ்ட் கேஸ் ரிவியூவே 8 மணிக்கு தான் ஆரம்பிப்பாங்க. நம்ம 4 மணிக்கு வேலை முடிச்சிட்டாலும் கண்டுக்கவே மாட்டாங்க. ஏதாவது கேட்டா சாப்ட்வேர் கம்பெனினா லேட் நைட் வொர்க் பண்றது ரொம்ப சாதரணம்னு சொல்லிடும்.சண்டை போட்டா 9 மணி வரைக்கும் வேலை கொடுக்கும்னு புரிஞ்சி போச்சி (வேற என்ன புடுங்கன ஆணியெல்லாத்தையும் திரும்ப அதே எடுத்தல அடிக்க சொல்லும்.) அதுக்கு பேசாம 4 மணில இருந்து 7:30 மணி வரைக்கும் சும்மா ஓபி அடிச்சிட்டு 9 மணிக்கு கடைசி பஸ்ல போனா நல்ல பேரும் கிடைக்கும். கம்பெனி போன், கம்பெனி இண்டர் நெட்னு ஜாலியா எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சாச்சு.அப்படியே போக போக புது மேனஜர் வந்தாரு. எப்படியும் எல்லாரும் 9 மணி வரைக்கும் இருக்காங்கனு சொல்லி ப்ளானிங் எல்லாம் அது வரைக்கும் போட ஆரம்பிச்சிட்டாரு. இப்ப கண்டிப்பா குறைந்த பட்சம் 9 மணி வரைக்கும் வேலை செஞ்சாகனும்னு நிலைமை வந்துடுச்சி.அதுவும் இல்லாம இப்ப டீமை லீட் பண்ற ரேஞ்சுக்கு நாம வந்தாச்சு. ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க. (இந்த கத்துக்குட்டிங்களும் ஒரு வருஷம் முடிஞ்சவுடனே உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பேனு கம்பெனி மாறிடுங்க...) அவுங்க செய்யற வேலைக்கு நாமதான் பொறுப்பு. வேலைக்கு சேர்ந்து 2 - 3 வருஷத்துல இந்த நிலைமை. ஆன்சைட்டிற்கிட்டயும் நாம திட்டு வாங்கணும் (டெலிவரபுல் பாதிக்க கூடாதாம்) அதே சமயம் இந்த பசங்க பண்றதெல்லாத்தையும் நம்ம பார்க்கனும். மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது.இப்படியே பார்த்தா காலைல எல்லாருக்கும் முன்னாடி வந்து ஆன்சைட்ல இருந்து வந்திருக்க மெயில் பார்த்து அப்பறம் ஆன்சைட் காலுக்கு ரெடியாகி போன் பேசி, யார் யாருக்கு என்ன வெலைனு நாம பிரிச்சி கொடுத்து அவுங்க கூடவே இருந்து பண்ண வைக்கனும். அப்பறம் அதுங்க முடிக்கற வரைக்கும் கூடவே இருந்து வேலை பார்த்து அவுங்க போனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் சரி பார்த்து ஆன்சைட்டிற்கு மெயில் அனுப்பிட்டு (இந்த மெயில் அடிக்க குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும்) நாம கிளம்பனும். இந்த டென்ஷன் இருக்குது பாருங்க...சில சமயம் நான் மழைல போகும் போது கைல குடை இருக்கறதை கூட மறந்து அப்படியே மழைல நடந்து போயிருக்கேன். அப்புறம் வீட்டுக்கு போனவுடனே கொஞ்ச நேரம் மாடில காத்து வாங்க போயிட்டு ரிலாக்ஸாகி தான் கீழவே வருவேன். எக்ஸிக்யூஷன் சமயத்துல காலைல 8 மணிக்கு போய் ராத்திரி 12 மணிக்கு குறைந்து வர முடியாது. அந்த டென்ஷன்ல ஒரு மாசம் இருந்தா ஒரு வாரம் லீவ் போட்டு தூங்கனும்னு தோனும்.வேலையே இல்லாத சமயமும் அப்ப அப்ப இருக்கும். அந்த மாதிரி சமயத்துல சும்மா டாக்குமெண்ட் ப்ரிப்பேர் பண்ணுனு சொல்லிடுவாங்க. அப்ப வர கோபம் இருக்கு பாருங்க. சான்ஸே இல்லை. இதவிட கொடுமை ராத்திரி வேலை செய்யற ப்ராஜக்ட்ஸ்...எனக்கு என்னனா ஒரு வேளை நமக்கு தான் பீப்பிள் மேனேஜ்மெண்ட் தெரியலையோனு கஷ்டமா இருக்கும். காலேஜ்ல டூர் ஆர்கனைஸ் பண்ணிருக்கேன், டிப்பார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு எல்லாம் முன்னாடி நின்னு வேலை பார்த்திருக்கோம். ஆனா இந்த மாதிரி கஷடப்பட்டதில்லை.ஒரு வருஷத்துக்கு மேல ரிலிஸ் பண்ண சொல்லி கேட்டுட்டு இருந்தேன். கடைசியா எங்க மேனஜர்கிட்ட நான் சொன்னது இதுதான். இந்த ப்ராஜக்ட்ல இருந்து நீங்க என்னை ரிலிஸ் பண்ணலைனா நான் கண்டிப்பா இன்னும் 2 வருஷத்துல ஹார்ட் அட்டாக்ல செத்துடுவேனுதான். கடைசியா என்னை அந்த ப்ராஜக்ட்டை விட்டு ரிலீஸ் பண்ணிட்டாரு... அதுக்கு அப்பறம் பெருசா மாற்றம் இல்லை.இந்த மாதிரி வொர்க் கல்சர், கண்ட நேரத்துக்கு சாப்பிடறது, ஒரே இடத்துல உக்கார்ந்திருக்கறது, சரியான நேரத்துல தூங்காம இருக்கறது. எல்லாத்துக்கும் மேல சின்ன வயசுல அதிக சுமையே சேத்துக்கறது இதெல்லாம் நம்மல அதிகமா பாதிக்கும்னு சொல்றாங்க.ஒரு நாளைக்கு நாம அதிக பட்சம் எவ்வளவு நடக்கிறோம்? உடல் உழைப்பும் இல்லை. ஹை கலோரி ஃபுட், இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்.... எப்படி நம்மல நாம சரி பண்ணிக்க போறோம்?போன வருஷம் சென்னைல சாப்ட்வேர் கம்பெனி மற்றும் கால் செண்டர்ல வேலை செய்யற 30- 40 பேர் 32 வயசுக்குள்ள இறந்திருக்கிறார்கள் என்று படித்த நியாபகம்.ஒரு மரணத்தின் வலியே தாங்க முடியாத நிலை. இதே வாழ்க்கை வாழ்ந்தால் எத்தனை பேரை இழப்போம் என்று தெரியவில்லை. 60 - 70 வயசுல நம்ம அப்பா, அம்மா சம்பாதிச்ச பணத்தை நாம 30 வயசுக்குள்ள சம்பாதிடறோம். அதுக்காக நம்ம வாழ்க்கையையும் அதுக்குள்ளே முடிஞ்சிடனுமா?

0 Comments:

Post a Comment

<< Home